ஏழையாக மாற சிறந்த வழிகள்

இந்த தலைப்பு உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம். உண்மையில் ஏழையாக மாறுவதற்கோ அல்லது இருப்பதற்கோ நீங்கள் மெனக்கெட வேண்டும். உங்களை அறியாமலே அந்த மெனக்கெடல் இருப்பதால் நீங்கள் ஏழையாக இருக்குறீர்கள். ஏழையாக வாழ்க்கையை வாழ்வதற்கான சில வழிகளை இங்கே காணலாம்.

1. சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யுங்கள்
நீங்கள் இந்த ஒன்றை மட்டும் செய்தால், மற்ற எந்த விதியையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எவரும் ஏழையாக மாற இதுவே எளிதான வழி. நீங்கள் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்தாலும் உங்கள் செலவு அதனைவிட அதிகமாய் இருந்தால் உங்கள் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை விட்டு செல்லும்.

2. தேவையில்ல ஆசை
ஆசைப்படுவது ஒன்றும் குற்றம் அல்ல, ஆனால் அந்த ஆசையினால், தேவையில்ல ஆடம்பர பொருட்களை வாங்குவது ஏழையாக மாற மற்றுமொரு சிறந்த வழியாகும்.

3. பட்ஜெட் போடாதீர்கள்
பட்ஜெட் போட்டால் உங்கள் பணம் எங்கே போகிறது என்று எளிதாக கண்டறிய முடியும். பட்ஜெட் இல்லையெனில் தாராளமாக செலவு செய்யலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கும்,

4. கடன் வாங்குங்கள்
எல்லாவற்றையும் கடனில் வாங்குங்கள். மாதம் உங்கள் சம்பளத்தில் பெரும் பகுதி வட்டியாக மட்டுமே செல்லட்டும். விடுமுறைகள், கார்கள் மற்றும் ஆடம்பரத்திற்காக கடன் வாங்குவது பணமில்லாமல் இருப்பதற்கான சிறந்த வழி. கிரெடிட் கார்டுகளை அதிகமாக உபோயோகித்தல் இன்னும் விரைவாக நீங்கள் ஏழையாகலாம்.

5. சேமிக்க வேண்டாம்
சேமிப்புகள் செல்வத்தைக் கட்டியெழுப்ப உதவுகின்றன, எனவே நீண்ட கால வறுமைக்கான ஒரு நல்ல வழி – சேமிப்பின்றி பார்த்துக்கொள்வது. ஏதேனும் அவசர செலவுகள் வந்தால் இன்னும் விரைவாக ஏழையாகலாம்.

6 போதை பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் வீணடிக்க போதை பழக்கம் நல்ல வழி. காலங்காலமாக குடிப்பழக்கம் பல தொழிலையும் உறவையும் அழித்திருக்கிறது. குடிகாரர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தன் சம்பளம் அனைத்தையும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர்.

7. குறைந்த ஊதியம் பெறும் வேலையில் இருங்கள்
நீங்கள் வெறுக்கும் ஒரு வேலையை குறைந்த சம்பளமாக இருந்தாலும் செய்யுங்கள். திறமையை எக்காரணம் கொண்டும் வளர்த்து கொள்ளாதீர்கள் ஏனனில் திறமை அதிக சம்பளம் பெற்று தரும் – நீங்கள் ஏழையாக மாற முடியாது.

8. இளமையை அனுபவியுங்கள்
இளமையை எந்த கவலையுமின்றி அனுபவியுங்கள். நண்பர்களுடன் நிதமும் ஊர் சுற்றுங்கள். பார்ட்டி பண்ணுங்கள்.

9. நிதியறிவு வேண்டாம்
நிதியறிவு உங்கள் பொருளாதார மேம்பாட்டை வலியுறுத்தும். நீங்கள் செய்யும் பொருளாதார தவறுகளை சரி செய்ய வாய்ப்பளிக்கும். ஆனால் ஏழையாக மாறும் கொள்கைக்கு எதிராக இருப்பதால் நிதியறிவு அறவே வேண்டாம்

10. முதலீடு செய்யாதீர்கள்
முதலீடுகள் உங்கள் செல்வத்தை பெருக்கி விடும். முடிந்த வரை செலவு செய்யுங்கள் எஞ்சிய பணத்தை வங்கியிலேயே விட்டு வையுங்கள். பணவீக்கம் அதனை தின்று விடட்டும்.

யாரும் ஏழையாக மாறத் திட்டமிடுவதில்லை, இருந்தும் பலர் ஏழைகளாகவே வாழ்ந்து முடிக்கின்றனர்.

மேலேகுறிப்பிட்ட இந்த வழிகளில் நீங்களும் பயணித்தீர்கள் என்றால் –

வழி மாறுங்கள் உங்கள் வாழ்க்கை மாறட்டும்.

 

You may also like...