பணத்தை பற்றி ஓஷோ

Osho

நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.

நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள், ஓன்றுக்கெரன்று எதிரானவை.

பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஓரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.

பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஓருவர் அதனை பாராட்ட வேண்டும்.

ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.

பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கெரள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.

ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஓரு கையிலிருந்து இன்னெரரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்) போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.

என்னிடம் ஓரே ஓரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பெரழுது அந்த ஓரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஓரு ரூபாய் ! ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை.

Source: osho-tamil

You may also like...