டிபி கூப்பரின் மர்மம்
1971 ஆம் ஆண்டு நன்றி செலுத்தும்(Thanks Giving) நாளன்று, டன் கூப்பர் (Dan Cooper) என்று தன்னை அழைத்துக் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் விமான நிலைய கவுண்டரை அணுகி, போர்ட்லேண்டிலிருந்து சியாட்டிலுக்குச் செல்லும் விமானத்திற்கான ஒரு வழி டிக்கெட்டை வாங்கினார்.
சில மணிநேரங்களில், அவர் $200,000 தொகையைக் கொள்ளையடித்துவிட்டு மர்மாக மறைவார் என்று யாரும் எதிர்ப்பார்திற்கமுடியாது.
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க வரலாற்றில் FBI ஆல் தீர்க்கப்படாத ஒரே விமான கடத்தல் இதுவே ஆகும்.
அமெரிக்க FBI அவரை “40களின் நடுப்பகுதியில் இருக்கும் ஒரு அமைதியான மனிதர், கருப்பு டை மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார்” என்று குறிப்பிடுகிறது.
அன்றைய தினம் அவர் விமானதிற்காக காத்திருந்தபோது போர்பன் மற்றும் சோடாவை ஆர்டர் செய்தார்.
அவரது திட்டம் மிகவும் எளிமையானது. விமானம் புறப்பட்ட பிறகு, கூப்பர் விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு குறிப்பைக் கொடுத்தார். அவள் உடனடியாக எதிர்வினையாற்றாததால், அவர் குனிந்து, “மிஸ், நீங்கள் அந்தக் குறிப்பைப் பார்ப்பது நல்லது. என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது.”
அவரது Briefcase யை திறந்து காட்டிய பிறகு, மிகவும் அதிர்ந்த விமானப் பணிப்பெண் கேப்டனிடம் அந்த குறிப்பை கொண்டு சென்றார். Cooper இன் கோரிக்கைகள், நான்கு பாராசூட்டுகள் மற்றும் $200,000 ரொக்க பணம். சியாட்டிலில் தரையிறங்கும்போது தனக்கு வேண்டும் என்று கூறினார்.
விமானம் சியாட்டிலில் தரையிறங்கியதும், FBI ஆல் கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் பாராசூட்டுகளுக்கு ஈடாக 36 பயணிகளை கூப்பர் செல்ல அனுமதித்தார்.
விமானம் மீண்டும் பணியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பறக்க துவங்கியது, தாழ்வாக பறக்க வேண்டும் என்று மட்டும் இம்முறை கூப்பர் கூறினார், மற்றும் மெக்சிகோ சிட்டிக்கு செல்ல கூறினார்.
ஆனால் விமானம் சியாட்டில் மற்றும் ரெனோ, நெவாடா இடையே எங்கோ பறக்கையில், கூப்பர் போயிங் 727 இன் பின்புற கதவிலிருந்து வெளியேறி அந்த கடுமையான குளிரில் எங்கோ மறைந்தார்.
வேட்டை தொடங்கியது
FBI ஒரு நீண்ட விசாரணையைத் தொடங்கியது, அமெரிக்க வடமேற்கின் அடர்ந்த, கரடுமுரடான காடுகளில் பல வாரங்கள் தேடிய பிறகு, FBI யால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, 800 க்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்த பிறகும், கடத்தல்காரன் அல்லது அவனது பாராசூட் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் குதித்து உயிர் பிழைத்தாரா? அவர் உயிர் பிழைக்காவிடில் அந்த பணம், உடைகள் மற்றும் பாராச்சூட் எங்கே?
இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
FBI ஆல் இறுதியாக 2016 இல் “மற்ற விசாரணைகளில் கவனம் செலுத்துவதற்காக” இந்த வழக்கை கூப்பர் ஐ கண்டுபிடிக்காமலே முடித்து வைத்தது.