கடன் பனிப்பந்து முறை

 

கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method) – கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகளில் ஒன்று கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method). இதில் ஒரு நபர் தனது அனைத்து கடன்களையும் சிறியது முதல் பெரியது வரை பட்டியலிட வேண்டும், பின் சிறிய கடனை முதலில் அடைக்க ஒவ்வொரு மாதமும் கூடுதல் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த சிறிய கடனை திருப்பி செலுத்திய பின் அடுத்த சிறிய கடனை அடைக்க முற்பட வேண்டும். இவ்வாரே அணைத்து கடன்களையும் அடைக்கலம்.
டேவ் ராம்சேயால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த முறை, ஒரு கடனை ஒன்றன் பின் ஒன்றாகத் அடைப்பதன் மூலம் அணைத்து கடன்களையும் எளிதாக அடைப்பதற்கான வழிகளை பரிந்துரைக்கிறது.

கடன் பனிப்பந்து முறை எவ்வாறு செயல்படுகிறது?

நீங்கள் கடன் பனிப்பந்து முறையை பின்பற்றும் போது, ​குறுகிய காலத்தில் சிறிய அளவிலான கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். மிகச்சிறிய கடன் அடைந்தவுடன், அந்தக் கடனுக்காக நீங்கள் ஒதுக்கிய பணத்தை அடுத்த கடனை அடைப்பதற்காக ஒதுக்குங்கள். இதே முறையை உங்கள் கடன்கள் அனைத்தும் அடைபடும் வரை கடைபிடியுங்கள்.

இந்த முறை ஒரு பனிப்பந்து விளைவை உருவாக்குகிறது, ஒரு பனிப்பந்து கீழ்நோக்கி உருளும் போது, ​​வேகம் கூடி மேலும் மேலும் பனியை உள்ளிழுத்து மிகப்பெரிய பணிபந்தாய் உருவாகிறது. அதே போல் சிறிய கடன்களின் குறைப்பு, உங்கள் உத்வேகத்தை பெருக்கி பெரிய கடன்களை அடைப்பதற்கான ஊக்கத்தை அளிக்கிறது

கடன் பனிப்பந்து மூலம் உங்கள் கடன்களை எவ்வாறு அடைப்பது?

கடன் பனிப்பந்து முறையை இந்த நான்கு படிகளுடன் தொடங்கவும்

  1. நிலுவையில் உள்ள உங்கள் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் அனைத்தையும் பட்டியலிடுங்கள்.
  2. பட்டியலை மிகச் சிறிய கடன்களில் இருந்து மிகப்பெரிய கடன்கள் வரை வரிசைப்படுத்தவும்.
  3. வட்டி விகிதம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், சிறிய கடனை முதலில் அடைக்கவும். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​உங்கள் மற்ற எல்லாக் கடன்களுக்கும் குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி வரவும்.
  4. பனிப்பந்தை உருட்டிக்கொண்டே இருங்கள் – மிகச்சிறிய கடன் அடைந்தவுடன் அதற்கு செலுத்திய தொகையையும் சேர்த்து அடுத்த சிறிய கடனுக்குச் செலுத்துங்கள். அந்த கடன் அடைந்தவுடன் கடன் 1 மட்டும் கடன் 2 தொகையையும் சேர்த்து அடுத்த கடனுக்குச் செலுத்துங்கள். அணைத்து கடன்களும் அடையும் வரை இதே முறையை பின்பற்றவும்.
கடன் பனிப்பந்து – உதாரணம்
கடன் நிலுவை தொகை மாதாந்திர குறைந்தபட்ச தொகை
Credit Card A ₹ 2,500 ₹ 250
Credit Card B ₹ 15,000 ₹1500
Car Loan ₹ 5,00,000 ₹ 5,000
Personal Loan ₹ 10,00,000 ₹ 10,0000

ஒரு மாதத்தில் உங்களிடம் அதிகமாக 2500 ரூபாய் உள்ளது என்று வைத்துகொள்வாம்

  1. கடன் பனிப்பந்து முறையை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு A தவிர, மற்ற எல்லா கடன்களுக்கும் குறைந்தபட்ச தொகையை செலுத்துங்கள்.
  2. கிரெடிட் கார்டு A-க்கு மொத்தமாக ஒருமுறை ₹2,500 செலுத்துங்கள். முதல் கடன் மொத்தமாக அடைந்துவிடும்.
  3. முதல் சிறிய கடனைச் செலுத்திய பிறகு மிச்சமிருக்கும் அந்த தொகையை (250 ரூபாய்) – கிரெடிட் கார்டு Bக்கான குறைந்தபட்சத் தொகையான ₹1500ஐச் சேர்த்து, மொத்தமாக ₹ 1750 ஆக செலுத்தவும். கிரெடிட் கார்டு B- அடையும் வரை இவ்வாரே செலுத்துங்கள்.
  4. கிரெடிட் கார்டு A மற்றும் B ஐத் அடைந்த பிறகு, உங்களிடம் இப்போது அதிக பணம் மிச்சமிருக்கும், அதை நீங்கள் அடுத்த சிறிய கடனை அடைப்பதற்கு பயன்படுத்தலாம் – கார் கடனை அடைக்க இப்போது உங்களிடம் ₹6,750 உள்ளது (கிரெடிட் கார்டு A இன் குறைந்தபட்சத் தொகை ₹ 250+ குறைந்தபட்சம் ₹ 500+ கார்க் கடனுக்கான குறைந்தபட்சத் தொகை ₹ 5,000),
  5. கார் கடனை அடைத்தவுடன், நீங்கள் தனிநபர் கடனை இதே முறையை பயன்படுத்தி எளிதில் அடைக்கலாம்.

You may also like...