கடன் பனிச்சரிவு முறை
கடன் பனிச்சரிவு (Debt Avalanche) முறை என்பது கடனை செலுத்துவதற்கான மற்றொரு உத்தி. முதலில் உங்கள் அதிக வட்டிக் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவதும், அதைத் தொடர்ந்து அடுத்த அதிக வட்டி விகிதத்துடன் கடனை அடைப்பதும் இதில் அடங்கும். இந்த முறை கடன் பனிச்சரிவில் இருந்து வெளியேறவும், அதிக வட்டிக் கட்டணங்களைக் குறைக்கவும் உதவும்.
கடன் பனிச்சரிவு முறை எவ்வாறு செயல்படுகிறது?
நீங்கள் கடன் பனிச்சரிவு முறையை பின்பற்றும்போது, வேறு எந்தக் கடனுக்கும் முன்பாக உங்கள் அதிக வட்டிக் கடனை நீக்குவதில் கவனம் செலுத்தவும். எனவே, உங்கள் அதிக வட்டிக் கடனாக 36% வருடாந்திர சதவீத விகிதத்துடன் கிரெடிட் கார்டு கடன் இருந்தால், அந்தக் கடனை உங்கள் முதல் இலக்காகக் கொள்ளவும் , உங்கள் மற்ற கடன்களில் குறைந்தபட்ச மாதாந்திரப் பணம் செலுத்தி வரவும். உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் மிச்சம் செய்யும் எந்தக் கூடுதல் பணமும் உங்களின் அதிக வட்டிக் கடனை நோக்கிச் செல்லும் – இந்த விஷயத்தில், 36% கிரெடிட் கார்டு கடன்.
36% கிரெடிட் கார்டு கடனை அடைத்ததும், அடுத்த அதிக வட்டி விகிதத்துடன் கூடிய கடனுக்குச் செல்லுங்கள். உதாரணத்திற்கு 15% தனிநபர் கடன் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்களுடைய இலக்கு தனி நபர் கடன், மாதாந்திர பட்ஜெட்டில் மிச்சமாகும் எந்தவொரு தொகையையும் தனி நபர் கடனை நோக்கிச் செல்லும்.
இந்த முறையை பயன்படுத்தி உங்கள் கடன்கள் அனைத்தையும் அடைக்கலாம்.
தெளிவாகச் சொல்வதென்றால், மலைப்பகுதியில் பனிச்சரிவின் பொது, கற்கள் மற்றும் பாறைகள் உடைபடுவது போல், உங்களின் அதிக வட்டி விகிதக் கடன்கள் உடைபடும்.
கடன் பனிச்சரிவு மூலம் உங்கள் கடன்களை எவ்வாறு அடைப்பது
1. உங்கள் கடன்கள் அனைத்தையும் பட்டியலிடுங்கள். கடன்களை அதிக வட்டி விகிதத்தில் இருந்து குறைந்த வட்டி விகிதத்திற்கு வரிசைப்படுத்துங்கள்.
2. மாதாந்திர பட்ஜெட் கொண்டு வாருங்கள். உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களைக் கண்காணிக்கும் போது, உங்கள் மாதாந்திர செலவுகளை தாண்டி மிச்சமாகும் பணத்தை, அதிக வட்டிக் கடனுக்கு கூடுதலாக செலுத்துங்கள்.
3. உங்கள் அதிக வட்டிக் கடனை அடைத்தவுடன், அடுத்த அதிக வட்டி விகிதத்துடன் கடனை அடைப்பதற்கு செல்லவும்.
4. உங்கள் கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் வரை இந்த அணுகுமுறையைத் தொடரவும்.
கடன் பனிச்சரிவு – உதாரணம்
கடன் | நிலுவை தொகை | மாதாந்திர குறைந்தபட்ச தொகை | வட்டி விகிதம் |
Credit Card | ₹ 25000 | ₹ 2500 | 36 |
Home Loan | ₹ 15,00,000 | ₹ 15,000 | 7 |
Personal Loan | ₹ 10,00,000 | ₹ 25,000 | 15 |
ஒரு மாதத்தில் உங்களிடம் அதிகமாக 2500 ரூபாய் உள்ளது என்று வைத்துகொள்வாம்
- ஒரு மாதத்தில் உங்களிடம் அதிகமாக 2500 ரூபாய் உள்ளது என்று வைத்துகொள்வாம்
- கடன் பனிச்சரிவு முறையை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு கடன் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் அதனை முதலில் அடைக்க வேண்டும. எனவே குறைந்தபட்ச தொகையான 2500 ரூபாயுடன் உங்களிடம் அதிகமாயுள்ள 2500 ரூபாயும் சேர்த்து 5000 ரூபாய் செலுத்தி வரவும்.
- கிரெடிட் கார்டு கடன் அடைந்தவுடன் தனி நபர் கடனுக்கு செல்லுங்கள். இப்பொழுது உங்களிடம் அதிகமாயுள்ள 2500 ரூபாயை தனி நபர் கடனுக்கு கூடுதலாக செலுத்தி வரவும்.
- வீடு கடன் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் மற்ற கடன்கள் அனைத்தும் முடிந்தவுடன் வீட்டு கடனை அடைப்பதில் கவனம் செலுத்தலாம்