பணக்காரராக சிறந்த நான்கு வழிகள்

 

நீங்கள் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறக்காத வரை, செல்வத்தை உருவாக்குவது மிகவும் கடினம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பொறுத்து, செல்வத்தை நோக்கிய உங்கள் பயணமும் மாறுபடலாம்.

நீங்கள் கோடிஸ்வரர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் வெற்றியின் ரகசியத்தை அறிய விரும்புகிறீர்கள். உண்மையில் அவர்களின் ரகசியம் என்ன? அவர்கள் அந்த நிலைக்கு எப்படி அங்கு வந்தார்கள்? அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை என்ன?

விடை தேடுவோம்! பொதுவாக ​​செல்வத்தை அடைவதற்கு நான்கு முக்கியப் பாதைகள் உள்ளன.

1. சேமிப்பு பாதை

செல்வத்தை கட்டியெழுப்ப இது எளிதான பாதை மட்டுமல்ல, நீங்கள் இளம் வயதில் தொடங்கினால், அது எப்போதும் நிறைய செல்வத்தை கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கிறது.

இவர்கள் பொதுவாக நடுத்தர வர்க்க வருமானத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குறைந்த வாழ்க்கைச் செலவு முறைக்கு தங்களை மாற்றியிருந்தனர், ஆடம்பரமாக செலவழிப்பதை விட சேமிப்பதை விரும்பினர். தங்கள் வருமானத்தில் 20% அல்லது அதற்கு மேல் சேமித்தனர். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தங்கள் சேமிப்பை, முதலீடு செய்யத் தொடங்கியிருந்தனர் – பல ஆண்டுகளாக விவேகத்துடன் அதைத் தொடர்ந்தனர்.
இவர்கள் எத்தனை கடின சூழ்நிலையிலும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதை நிறுத்தவில்லை, மேலும் தங்கள் செல்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனமான வழிகளைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

பார்க்க சுலபமாக தெரிந்தாலும் சேமிப்பு பாதை அவ்வளவு எளிதல்ல. இதற்கு மகத்தான நிதி ஒழுக்கமும் நீண்ட கால அர்ப்பணிப்பும் தேவை.

2. கனவுகளின் பாதை

செல்வத்தை கட்டியெழுப்புவதற்கான கடினமான பாதை இதுவாக இருக்கலாம், ஏனென்றால் ஒரு தொழிலைத் தொடங்குவது, வெற்றிகரமான நடிகர், இசைக்கலைஞர் அல்லது எழுத்தாளராக
ஆவது போன்ற ஒரு கனவைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதல்ல.

இந்த பாதையில் பாதி பயணத்துடன் திரும்பியவர்களே அதிகம். இப்பாதையில் பயணிக்கும் லட்சம் பேரில் மிக சிலரே இலக்கை அடைகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த பாதையில் செல்ல விரும்புவோர் நீண்ட போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டும், நிதி அழுத்தத்தை சமாளிக்க வேண்டும். விடுமுறை நாட்கள் ஏதுமின்றி உங்கள் கனவுகளை பின்தொடர்ந்திட வேண்டும்.

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் எதிர்பார்ப்பின்றி சந்திக்கும் நபராக நீங்கள் இருந்தால், இந்த பாதை உங்களுக்கானது.

3. ஏறுபவர்களின் பாதை

ஏறுபவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் அவர்கள் ஒரு மூத்த நிர்வாக பதவிக்கு போகும் வரை கார்ப்பரேட் ஏணியில் ஏறுவதற்கு தங்கள் முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள்.

கோடீஸ்வரர் ஆவதற்கான இரண்டாவது கடினமான பாதை இதுவாகும். நீங்கள் வலுவான உறவுகளை உருவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். சமூகம் மற்றும் உங்கள் துறையில் சக்திவாய்ந்த நபர்களுடன் நீடித்த தொடர்புகளை உருவாக்குவது அவசியம்.

இருப்பினும், கனவு காண்பவர்களைப் போலவே, ஏறுபவர்களுக்கும் நீண்ட வேலை நேரம் செய்ய வேண்டி இருக்கும்.

ஏறுபவர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணி – அவர்களது நிறுவனமாகும். உங்கள் நிறுவனம் வளரும் பட்சத்தில் அதனுடன் நீங்களும் வளருவீர்கள்.

4. திறமைசாலிகளின் பாதை

இவர்கள் தனி திறமைவாய்ந்தவர்கள். தங்கள் திறமையின் உச்சத்தை தொட்டவர்கள். இவர்களின் அறிவு மற்றும் நிபுணத்துவத்திற்காக அவர்களுக்கு அதிக பணம் வழங்கப்படுகிறது. இது மற்ற பாதையிலிருந்து அவர்களை வேறுபடுத்துகிறது.
திறமைசாலிகள் அனைவரும் இயற்கையான திறமைகளுடன் பிறக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து படிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.

பாதைகள் எதுவாக இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் விடாமுயற்சியும், மனஉறுதியும் இருந்தால் இலக்குகள் வசப்படும்.

You may also like...