பணத்தை விரைவாகச் சேமிப்பது எப்படி?
நம்புங்கள்! அதிக சிரத்தை இல்லாமல் உங்கள் சேமிப்பு இலக்குகளை அடைய முடியும்.
சேமிப்பு மற்றும் பட்ஜெட் (Budget) ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்கு பெரிய மலைப்பாக தோன்றலாம் ஆனால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதை மறவாதீர்கள்.
பணத்தை சேமிப்பது என்பது ஒரு மரத்தை வளர்ப்பது போன்றது, நீங்கள் தினமும் அதனை பராமரிக்க வேண்டும். அதன் பலன்களை அனுபவிக்க 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதன் பலன் உண்மையில் உங்களுக்கு ஒரு அற்புதமான எதிர்காலத்தைக் உருவாக்கும்.
உங்கள் சேமிப்பை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்த எங்கள் சிறந்த 15 பரிந்துரைகளை கீழே காணலாம்.
1. பட்ஜெட் மற்றும் உங்கள் நிதி நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்
பட்ஜெட் போடுவதை கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் பணத்தைச் சேமிக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் பணப்புழக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துதல், மாதாந்திர பில்கள் மற்றும் சேமிப்புப் பங்களிப்புகள் உட்பட உங்களின் வரவுகள் மற்றும் செலவுகள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதனை கொண்டு ஒரு மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்குங்கள். முடிந்தவரை அதனை ஒழுக்கமாக பின்பற்றுங்கள்.
விரைவாகச் சேமிக்கத் தொடங்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்குவது எப்படி?
30 நாட்கள் உங்கள் வரவுகள் மற்றும் செலவுகள் அனைத்தையும் கண்காணிக்கவும்.
நீங்கள் தற்போது எவ்வளவு சேமிக்கிறீர்கள் அல்லது ஒவ்வொரு மாதமும் எவ்வளவு அதிகமாகச் செலவிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உங்கள் மாத வருமானத்தை உங்கள் மாதாந்திர செலவினங்களுடன் ஒப்பிடவும்.
உங்கள் செலவினங்களை அத்தியாவசியம், விருப்பம் மற்றும் அநாவசிய செலவுகளாகப் பிரிக்கவும். உங்கள் அத்தியாவசிய செலவுகள் என்பது உங்கள் வாடகை மற்றும் பயன்பாட்டு பில்கள், மளிகை சாமான்கள் போன்றவை. விருப்பச் செலவுகள் என்பது பொழுதுபோக்கு மற்றும் சந்தா சேவைகள் போன்ற செலவுகள். அத்தியாவசிய செலவுகளை குறைப்பது கடினம் ஆனால் உங்கள் விருப்பச் செலவுகளை நீங்கள் குறைக்கலாம்.
நீங்கள் குறைக்கத் தொடங்கும் ஏதேனும் சில விருப்பச் செலவுகளைக் கண்டறியவும். பின் அதனை தவிர்த்துவிட்டு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை முதலீடு செய்யயும். இதேபோல் ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்பை தவறாமல் மறுமதிப்பீடு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யுங்கள்.
2. கடனில் இருந்து விடுபடுங்கள்
நீங்கள் சேமிக்கத் தொடங்கும் முன், உங்களுடைய தற்போதைய கடன்களில் ஏதேனும் நிலுவைத் தொகையை இருந்தால் அதனை செலுத்துங்கள், முடிந்தால் கடனை அடையுங்கள். உங்கள் கடனைச் செலுத்துவதைத் தள்ளிப் போட்டால், சேரும் வட்டியானது நீங்கள் சேமிக்கும் பணத்தை விழுங்கிவிடும்.
கடனில் இருந்து விரைவாக வெளியேற, 50/30/20 போன்ற பட்ஜெட் முறையைப் பயன்படுத்தவும்.
உங்கள் வருமானத்தில் 50% உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தவும், அதாவது வாடகை மற்றும் பயன்பாட்டு பில்கள் போன்ற செலவுகள்
உங்களின் வருமானத்தில் 30% உங்கள் விருப்பச் தேவைகளுக்குப் பயன்படுத்தவும், அதாவது உணவருந்துதல் மற்றும் சந்தா சேவைகள் செலவுகள்.
உங்கள் வருமானத்தில் 20% சேமிக்கவும். எனவே, நீங்கள் வரிக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பாதித்தால், 20,000 ரூபாயை சேமியுங்கள். ஒரு வருடத்தில், நீங்கள் 2,40,000 ரூபாய் மதிப்புள்ள கடனை அடைக்க அந்த தொகை உதவும்.
3. தனி சேமிப்புக் கணக்கை உருவாக்கவும்
பணத்தை விரைவாகச் சேமிக்க, உங்கள் அன்றாடத் தேவைகளுக்குச் செலவிடும் பணத்தை நீங்கள் சேமிக்க உத்தேசித்துள்ள பணத்திலிருந்து பிரிக்க வேண்டும். அந்த பணத்தை ஒரு தனி சேமிப்புக் கணக்கை உருவாக்கி அதில் சேமியுங்கள்.
அவ்வாறு செய்வதன் மூலம், தினசரி செலவுகளை ஈடுகட்ட உங்கள் சேமிப்பு நிதிகளில் இருந்து பணத்தை எடுக்கும் அபாயத்தைக் குறைக்கிறீர்கள்.
4. உங்கள் சேமிப்பை ஆட்டோமேட் செய்யுங்கள்.
உங்களிடம் நிலையான மாதாந்திர வருமானம் இருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்புப் பங்களிப்புகளை ஆட்டோமேட் செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பள நாளில் உங்கள் தினசரி செலவினக் கணக்கிலிருந்து உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு பணத்தை ஆட்டோமேட் முறையில் மாற்றுங்கள். உங்கள் சேமிப்பை ஆட்டோமேட் செய்வதன் மூலம், உங்கள் அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
5. உங்கள் பில்களை ஆட்டோமேட் செய்யுங்கள்.
பில் செலுத்துவதை ஆட்டோமேட் செய்யுங்கள். நீங்கள் சரியான நேரத்தில் அவற்றைச் செலுத்தவில்லை என்றால் நிறுவனங்கள் உங்களிடம் தாமதக் கட்டணங்களை வசூலிக்க கூடும், எனவே அவற்றைக் குறிப்பிட்ட தேதிக்கு முன் செலுத்துவது கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க உதவும்.
6. உங்கள் கார்டில் செலவு வரம்பை வைக்கவும்
பணத்தை விரைவாகச் சேமிப்பதற்கான சிறந்த வழி. உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் நீங்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கனா வரம்பை நிர்ணயம் செய்வது. இது அதிக செலவு செய்வதைத் தடுப்பதுடன் உங்கள் தினசரி செலவினங்களை முன்கூட்டியே மறுபரிசீலனை செய்ய உங்களை ஊக்குவிக்கிறது. பல வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.
7. வாடகையை குறைக்கவும்
ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையைச் சேமிக்கத் தொடங்குவதற்கான விரைவான வழிகளில் ஒன்று வாடகையைக் குறைப்பது. நீங்கள் தற்போது தனியாக வசிக்கிறீர்கள் என்றால், இதைச் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று ரூம்மேட் உடன் வாழ்வதைத் தேர்ந்தெடுப்பதாகும். இது உடனடியாக உங்கள் வாடகையை பாதியாகக் குறைக்கிறது, மேலும் நீங்கள் இரண்டு கூடுதலான அறை தோழர்களுடன் வாழத் தேர்வுசெய்தால், நீங்கள் தற்போது செலுத்தும் தொகையில் மூன்றில் ஒரு பகுதியைச் செலுத்துவீர்கள்.
எனவே, நீங்கள் தற்போது மூன்று படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டிற்கு மாதம் 15000 செலுத்தினால், கூடுதல் ரூம்மேட் மூலம் மாதம் 7500 சேமிக்கலாம். நீங்கள் இரண்டு பேருடன் வாழ முடிவு செய்தால், மாதம் 10000 சேமிக்கலாம். இது ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய்.
8. உங்கள் பில்களை குறைக்கவும்
பணத்தை விரைவாகச் சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழி உங்கள் பயன்பாட்டு பில்களைக் குறைப்பதாகும். உங்கள் மின்சார பில், கேஸ் பில், போன் பில் உங்கள் மாதாந்திர செலவுகளில் குறிப்பிட்ட பங்களிக்கிறது, எனவே நீங்கள் அவற்றைக் குறைக்க முடிந்தால், நீங்கள் கொஞ்சம் கூடுதல் பணத்தை சேமிக்கலாம்.
9. துணை தொழில் தொடங்குங்கள்
உங்கள் மாதாந்திர சேமிப்பை நீங்கள் தீவிரமாக அதிகரிக்க விரும்பினால், ஒரு துணை தொழில் தொடங்குங்கள். இது உங்கள் அலுவலக வேலை நேரத்திற்கு பிறகு ஒரு உணவு டெலிவரி அல்லது உணவகத்தில் மாலை நேர ஷிப்டுகளில் வேலை செய்வது, சில ஃப்ரீலான்ஸ் வேலைகள் செய்வது போன்றவையாகும்.
உங்களால் அவ்வாறு செய்ய முடிந்தால், உங்களின் துணை தொழிலில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பணத்தையும் நேரடியாக உங்கள் சேமிப்புக் கணக்கில் வையுங்கள்.
இருப்பினும், எந்தவொரு சேமிப்பு இலக்கையும் அடைய உங்கள் மன ஆரோக்கியம் மிக முக்கியமானது!
10. பயன்படுத்தப்படாத சந்தாக்களை ரத்து செய்யவும்
சந்தாக்கள் என்பது பல நிறுவனங்களுக்கு பணம் சம்பாதிக்கும் கனவு. ஏனென்றால், ஒரு வாடிக்கையாளர் தங்கள் சேவைக்கு சந்தா செலுத்தியவுடன், அவர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்ய மிகவும் தயங்குகிறார்கள்-அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட.
அரிதாகப் பயன்படுத்தப்படும் சந்தாவை ரத்து செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கக்கூடும், ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அதற்கு அதிக பணம் செலுத்தியுள்ளீர்கள். எனவே, சந்தாவை ரத்து செய்வது என்பது அதுவரை செலவழித்த பணம் அனைத்தும் வீணாகிவிட்டதை போலாகும். ஆனால், சந்தாவை ரத்து செய்வதைத் தாமதப்படுத்துவதன் மூலம் உங்கள் பணத்தை மேலும் வீணடிக்கிறிர்கள்.
11. சில விஷயங்களை நீங்களே சரிசெய்ய முயற்சிக்கவும்
சில குறிப்பிடத்தக்க சேமிப்புகளைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழி, சில உடைந்த பொருட்களை நீங்களே சரிசெய்ய முயற்சிப்பதாகும். யூடியூப் மற்றும் இணையத்திற்கு நன்றி, ஆன்லைனில் எதையும் எப்படி சரிசெய்வது என்பதை இப்போது நீங்கள் கண்டுபிடிக்கலாம். கசியும் குழாய்கள் முதல் உங்கள் ஜீன்ஸில் உள்ள ஜிப்பர் வரை அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். இவற்றை நீங்களே சரி செய்யும்பொழுது உங்கள் பணம் மிச்சமாகும்.
12. வருடத்தின் முடிவில் காரை வாங்கவும்
நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினால், மார்ச், ஜூன், செப்டெம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வாங்குங்கள் . ஏன்? ஏனெனில் பெரும்பாலான கார் டீலர்கள் குறிப்பிட்ட விற்பனை இலக்குகளை அடைய வேண்டும், அதனால் அவர்கள் நிறைய டிஸ்கோவுண்ட் தருவார்கள். இந்த இலக்குகள் வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டாலும், பெரிய போனஸ்கள் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். கார் டீலர் அவர்களின் காலாண்டு விற்பனை இலக்கை அடைய ஆர்வமாக இருப்பதால், ஒவ்வொரு நிதி காலாண்டின் முடிவிலும் உங்களுக்கு ஒரு சிறந்த டிஸ்கோவுண்ட் வழங்கப்படும்.
13. உங்கள் மளிகைச் செலவைக் குறைக்கவும்
ஒவ்வொரு வாரமும் உங்கள் மளிகைச் செலவைக் குறைக்க முடிந்தால், சில மாதங்களில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் shopping பழக்கத்தை முன்கூட்டியே திட்டமிடுவது. இதன் பொருள், நீங்கள் ஷாப்பிங் செல்வதற்கு முன் நீங்கள் எவ்வளவு செலவழிக்கப் போகிறீர்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து உங்கள் பட்ஜெட்டை அது தாண்டிச் செல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.
வாரத்திற்கு மும்முறை இறைச்சி இல்லா நாட்களாக கடைபிடியுங்கள். இறைச்சி பொதுவாக காய்கறிகள் மற்றும் காய்கறி அடிப்படையிலான பொருட்களை விட விலை அதிகம் என்பதால், வாரத்தில் குறைந்தது மூன்று நாளையாவது தேர்வு செய்வது உசித்தம்
14. செலவு செய்ய நாள்
பணத்தைச் சேமிப்பதை ஒரு பழக்கமாக மாற்றுவதற்கு உதவ, ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைப் செலவு செய்ய நாளாக அறிவியுங்கள், உங்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர, நீங்கள் எதையும் அந்நாளில் செலவழிக்க வேண்டாம். நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் இருந்தே அந்நாளில் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் பயன்படுத்தப்படாத பொருட்களை விற்கவும்
உங்கள் பணத்தை விரைவாகச் சேமிக்கத் தொடங்க விரும்பினால், உங்கள் பயன்படுத்தப்படாத உடைமைகள் அனைத்தையும் தணிக்கை செய்து அவற்றை Ebay அல்லது OLX போன்ற ஆன்லைன் சந்தையில் விற்கலாம். இது உங்கள் வீட்டைத் குப்பைகள் சேராமல் தடுப்பதுடன், உங்கள் சேமிப்பு இலக்கை நோக்கிச் விரைவாக செல்ல உதவும்